ஐலவ்யு...மாதவனுக்கு டூவிட் பதிவிட்ட முன்னணி நடிகை !

வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:39 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் மேயான் மான் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பி  மான்ஸ்டர் , கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது நடிகர் மாதவனைப் புகழ்ந்துள்ளார். ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் தனது ஃபேவரைட் மாதவன் மற்றும்  சிம்ரன் எனக் கூறியுள்ள நிலையில் தற்போது மாதவனைப் புகழ்ந்து ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் நூறு முறை சொல்லிவிட்டேன், நான் ஐல்லவ்யூ, வி லவ்யூ, எல்லோரும் உங்களைகாதலிக்கிறார்கள்…பல நேரங்களில் நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலமும் உங்கள் வேலையை அழகாகச் செய்வதன் மூலம்  வாழ்க்கையை அழகாக்கிக் கொள்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள மாறா வெற்றிகரமான ஓடிடி தளத்தில் ஓடுகிறது. இதுகுறித்துத்தான் பிரியா பவானி சங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

for the 100th time let me say, I love you, we love you and everyone loves you

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்