பா ம க இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட சினிமா பிரபலம்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:04 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக ஜி கே எம் தமிழ்க் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமகவின் தலைவராக பல ஆண்டுகாலம் செயல்பட்டவர் ஜி கே மணி. அவரின் மகனான ஜி கே எம் தமிழ்க்குமரன் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் பாமகவின் இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமகவின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து இப்போது அந்த பொறுப்புக்கு ஜி கே எம் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்