மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்க மூத்த தலைவர்கள் இன்று மல்லிகார்ஜூனே கார்கேவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் புதிய காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கார்கே தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தொண்டர்களின் தலைவர். அவரது தலைமையில் காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.