லைகா நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ்: என்ன படமாக இருக்கும்?

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (19:52 IST)
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் மற்றும் ராம் சேது ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது 
 
குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை பத்து முப்பது மணிக்கு அறிவிக்கப்படும் என லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது
 
லைகா நிறுவனம் தற்போது ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, சந்திரமுகி 2 ஆகிய படங்களை தயாரித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்