பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் அங்கும் நல்ல கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், படத்தில் கதாநாயகனாக நடிக்க இந்தி நடிகர் வருண் தவானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.