அஜித்தையே ஓரம் கட்டிய பிரதீப் ரங்கநாதன் - வசூலில் சக்கை போடு!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:55 IST)
குறும்படங்களை இயக்கி தனது திறமையை வெளிப்படுத்தியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தி இயக்கி கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றி படைத்து அப்லாஸ் அள்ளியது.
 
அதன் பிறகு தானே இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் லவ் டூடே. இன்றைய காதலையும் காதலர்களை வைத்து வெளிவந்த இப்படத்தில் இளம் நடிகை இவானா ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
அந்த படம் வெறும் 5 கோடி  பட்ஜெட்டில் உருவாகி  20 கோடிக்கு மேல் லாபம் ஈட்டிவிட்டது. தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியது. தெலுங்கி இதுவரை 6.5 கோடி வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் அஜித்தின் வலிமை தெலுங்கில் 6.கோடி வசூல் செய்ததை டவ் டூடே ஓவர் டேக் செய்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்