ஏன் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லவில்லை… லியோ குறித்து லோகேஷ் பதில்!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:40 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் இன்னும் படத்தின் ரிலீஸுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் படம் பற்றி பல தகவல்கள் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. மேலும் படத்தின் டிரைலரை வைத்து இந்த படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் என கருத்துகள் எழுந்துள்ளன.

இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒத்துக்கொண்ட இயக்குனர் லோகேஷ் “படம் ரிலீஸாகும் வரை அந்த தகவல் தெரிய வேண்டாம் என நினைத்திருந்தோம். ஏனென்றால் படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஒரு மனநிலையோடு வருவார்கள். எப்படியும் படம் பார்த்த பின்னர் அதைப் பற்றிதான் பேசப் போகிறார்கள் என்பதால் அதை ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்தோம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்