கமலின் மாஸ் work out துணுக்கை வெளியிட்ட லோகேஷ்… வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (10:50 IST)
இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 400 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் இப்போது 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த படத்தில் ஒரு காட்சிக்காக கமல் வொர்க் அவுட் செய்து அதன் பின்னர் நடித்தார் என லோகேஷ் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவை படத்தின் 25 ஆவது நாளில் வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அந்த வீடியோவின் துணுக்கு ஒன்றை பகிர்ந்தார். மேலும் முழு வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்