ஓடிடியில் ரிலீஸாகும் கவினின் லிஃப்ட் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:05 IST)
நடிகர் கவின் நடித்துள்ள லிஃப்ட் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

பிக் பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் ரிலீஸ் செய்வதற்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறந்து படங்கள் ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் ‘லிப்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்த படத்தை ஈகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க விநியோக உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால் இப்போது இரு தரப்புக்கும் இடையே படத்தின் உரிமை தொடர்பாக சிக்கல் எழவே இப்போது ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இப்போது அக்டோபர் 1 ஆம் தேதி நேரடியாக இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்