பிக்பாஸ் கவின் நடித்த த்ரில்லர் திரைப்படம்! – ஓடிடியில் வெளியாகும் “லிஃப்ட்”

வியாழன், 23 செப்டம்பர் 2021 (11:21 IST)
பிக்பாஸ் கவின் நடித்த த்ரில்லர் படமான லிஃப்ட் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர் கவின். முன்னதாகவே அவர் திரைத்துறையில் இருந்து வரும் கவின் படங்கள் சிலவற்றிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவின் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் “லிஃப்ட்”. ஒரு த்ரில்லர் கதையான இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தை புதிய இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 1 அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்