ஓவர் ஆட்டிட்டியூட் காட்டும் லாரன்ஸின் தம்பி.. கடும் அதிருப்தியில் புல்லட் படக்குழு!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:24 IST)
ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் ஹீரோவாக நடிக்கும் புல்லட் திரைப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அருள்நிதி நடித்த டைரி என்ற திரைப்படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்க, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ள ராகவா லாரன்ஸ் “புல்லட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எல்வின் ஹீரோவாக நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் என் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்ததைப் போல, எனது சகோதரருக்கும் அதை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என ஆதரவு கோரியிருந்தார்.

இப்போது அந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் எல்வின், இயக்குனரின் வேலைகளில் அதிகமாக மூக்கை நுழைக்கிறாராம். இதனால் இயக்குனர் உள்ளிட்ட தயாரிப்பு குழுவினர் அவர் மேல் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்களாம். ஏற்கனவே எல்வின் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்த போதும் இப்படிதான் ஓவர் ஆட்டிட்யுட் காட்டி அந்த படம் தொடங்கப் படாமலேயே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்