காதலருக்கு அன்பு முத்தம்!... நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு நிச்சயதார்த்தம்!

vinoth

புதன், 16 ஜூலை 2025 (10:31 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான மறைந்த ரவிச்சந்திரன் அவர்களின் மகள்வழிப் பேத்திதான் பிரபல நடிகையான தான்யா ரவிச்சந்திரன். அவர் ‘பலே வெள்ளையத் தேவா, ‘கருப்பன்’ மற்றும் ‘ரசவாதி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திறமையான நடிகையாக இருந்தும் அவரால் இன்னும் வெற்றிபெற்ற நடிகையாக முன்னேறவில்லை. சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் அவர் தற்போது தன்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பென்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளரான கௌதம் என்பவரை தான்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் காதலர்கள் இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் தான்யா. அதையடுத்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்