இது என்ன ஃபேன் மேட்-அ விட கேவலமா இருக்கு… ட்ரோல்களை எதிர்கொள்ளும் லால் சலாம் முதல் லுக் போஸ்டர்

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது.

இந்நிலையில் படத்தில் ரஜினி சம்மந்தப்பட்டக் காட்சிகளை மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயர் மொய்தீன் பாய் என்று அறிவிக்கப்பட்டு அவரின் தோற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாட்ஷா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெளியாகியுள்ள மிகவும் அமெச்சூராக இருப்பதாகவும், இதைவிட ரசிகர்கள் உருவாக்கும் போஸ்டரே மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரொல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்