தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

vinoth

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (08:35 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. இப்போது அந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்பதால் இப்போது சம்பள பேரம் நடந்து வருவதாகவும், அது இருதரப்புக்கும் சுமூகமாக அமையும் பட்சத்தில் அவர் இந்த படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்