தனுஷின் இந்தி படத்தில் கதாநாயகியாகும் கியாரா அத்வானி!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:52 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் கலக்கிய தனுஷ் 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்