கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த பிரியங்கா மோகன்!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (06:59 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் நாயகியான பிரியங்கா மோகன் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

இதை படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் கமெண்ட் செய்த பிரியங்கா மோகன் “மிகப்பெரிய படத்தில் என்னையும் ஒரு பங்காக ஆக்கியதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்