கமலின் ''விக்ரம்'' படத்தைப் பாராட்டிய கே.ஜி.எஃப் பட இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (00:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கியிருந்தார்.  இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, நரேன்,  பகத்பாசில், ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் சூர்யாவும் நடித்திருந்தனர்.
 

இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைபெற்று பாசிட்டிவாக விமர்சனம் பெற்று, 25 நாட்களைத் தாண்டி ஓடி வருகிறது.
இப்படம் இதுவரை ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலானது.


இந்த நிலையில் விக்ரம் படத்தைப் பார்த்த கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இப்படத்தின் கமல், பகத்பாசில், விஜய்சேதுபதி என எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது., அனிருத்தின் இசை ராக் ஸ்டார்தான்.லோகேஷின் படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன். அன்பறிவின் சண்டைக்காட்சி அசத்தலாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்