கௌரவம் சிவாஜி வசனம்… சிங்கிள் ஷாட்டில் கலக்கும் மம்மூட்டி… நண்பகல் நேரத்து மயக்கம் டீசர் 2

திங்கள், 11 ஜூலை 2022 (15:15 IST)
மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் டப்பிங் உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியான நிலையில் தற்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் முழுக்க கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் பேசும் பிரபலமான வசனம் மட்டுமே இடம்பெற, மம்மூட்டி மற்றொருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்