இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத சாதனை… மிரட்டிய KGF 2 டிரைலர்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:55 IST)
கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 109 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டிரைலர்  இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இப்போது வெளியாகி 24 மணிநேரத்தில் இந்த டிரைலர் 109 மில்லியன் (10.9 கோடி) பேரால் பார்க்கப்பட்டுள்ளது, இது இந்திய படங்கள் இதுவரை படைக்காத சாதனையாகும். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்