தெலுங்கின் பிரபல நடிகரான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க்யூ மற்றும் கஸ்டடி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில் இப்போது அவர் கார்த்திகேயா 2 என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பேன் இந்தியன் படமாக இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.