இமயமலையில் கார்த்தி படத்தின் ஷூட்டிங்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (17:48 IST)
கார்த்தி நடித்துவரும் ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங், இமயமலையில் நடக்க இருக்கிறது. 
 
கார்த்தி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. அதுவும் சாதாரண விவசாயி அல்ல. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் அவர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
இதில், கார்த்தி ஜோடியாக ‘வனமகன்’ சயீஷா நடிக்கிறார். கார்த்தியின் மாமன் மகள்களாக பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ‘தேவ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடித்துள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். கார்த்திக், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்தப் படத்தில், போலீஸாக நடிக்கிறார் கார்த்தி. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சென்னையில் இதன் ஷூட்டிங் தொடங்கியது. சென்னையில் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இமயமலை மற்றும் ஐரோப்பாவிலும் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்