யாஷின் டாக்ஸிக் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:04 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்