யாஷ் பிறந்த நாளில் கட் அவுட் வைத்த 3 ரசிகர்கள் உயிரிழப்பு.. மின்சாரம் தாக்கியதால் விபரீதம்..!

Mahendran

திங்கள், 8 ஜனவரி 2024 (10:18 IST)
நடிகர் யாஷ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் எதிர்பாராத காரணத்தினால் மின்சாரம் ஷாக் அடித்து பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேஜிஎப் படத்தில் நடித்த நடிகர் யாஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கர்நாடகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் யாஷ் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முயன்றனர். அப்போது கட் அவுட் அருகில் எந்த மின்சார கம்பத்தில்  உள்ள மின்சாரம் தாக்கியதில் மூன்று ரசிகர்கள் துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

 அரசியல்வாதிகளை மட்டும் இன்றி கட் அவுட் கலாச்சாரம்   நடிகர்களையும் தொற்றிக் கொண்ட நிலையில் அப்பாவி ரசிகர்கள் பலியாகி வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்