இந்திக்கு செல்லும் ஆடை – அமலாபால் வேடத்தில் யார் தெரியுமா ?

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:46 IST)
தமிழில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற திரைப்படமான ஆடை இப்போது பாலிவுட்டுக்கு சென்று இந்தி பேசவுள்ளது.

“மேயாத மான்” படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது படமாக அமலா பால் நடித்த படம் ஆடை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளியான செய்திகளுக்காகவும் அதையே போஸ்டர் மற்றும் டிரைலர்களில் முன்னிறுத்தியதாலும் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இந்த படம் மிகவும் பிற்போக்கான கருத்தைத் திணித்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வசூல் ரீதியாக சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் ரத்னகுமார் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் இந்த படததைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. அதில் அமலா பால் வேடத்தில் நடிக்க அவரின் நெருங்கிய நண்பரான கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்