விஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடக்குறதே வேற - சர்ச்சையில் சிக்கிய பிகில்!

திங்கள், 21 அக்டோபர் 2019 (16:19 IST)
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தங்களை தரைகுறைவாக பேசிய நடிகர் விஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பெரிய போராட்டமே வெடிக்கும் என பூ கடை தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


 
கடந்த செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வதாக கூறிய விஜய் "பூக்கடையில் வேலை பார்ப்பவனை வெடிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் தண்ணீர் தெளித்து வியாபாரத்தைக் கெடுத்து விடுவான்" என்று கூறினார்.  இந்த பேச்சு பூ தொழிலாளர்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், மேலும் அவன், இவன் என்று தரைகுறைவாக பேசி தங்களது மனதை புண்படுத்தியுள்ளதாகவும் ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கூறிய அவர், மாவட்டம் தோறும் சுமார் 1 லட்சம் பூ தொழிலாளர்கள் பூத்தொழில் செய்து வருகின்றனர். நாங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் புனிதமான பூ தொழிலாளர்களை அவமரியாதையுடன் பேசியதற்காக நடிகர் விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்னர் பிகில் படத்தின் போஸ்டர் வெளிவந்த போது கறி வெட்டும் கட்டை மீது செருப்பு காலுடன்  அமர்ந்திருந்ததாக கூறி கறிக்கடை சங்கத்தினர் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்