பிரபு சாலமனின் செம்பி ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் கமல்ஹாசன்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:57 IST)
நடிகர்கள் கோவை சரளா, தம்பி ராமையா மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்துள்ள செம்பி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன.

இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த  படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்