இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:08 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
கடந்த சில நாட்களாக மீண்டும் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நேற்று நடிகர் ஜெயம்ரவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் முத்தரசு விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.