கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்காக பயிற்சிகள் மேற்கொள்ள சிம்பு இப்போது லண்டனுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு தன்னுடைய சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றி அவரை தேடி வரும் தயாரிப்பாளர்களை திகில் அடைய வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸில் அவர் நடிக்கும் படத்துக்கும் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாகவும், ஆனால் கமல்ஹாசன் சிம்புவுக்கு 20 கோடி ரூபாய்தான் சம்பளமாக நிர்ணயித்துள்ளதாக சொல்லி, அவரை ஆஃப் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.