வெட்கத்தோடு போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் வைரலாகும் பிரியா பவானி சங்கர்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (14:28 IST)
மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.

சில தசாப்தங்களுக்கு முன்பெல்லாம் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்