தமிழ்நாட்டில் 120 திரையரங்குகளில் ரி ரிலீஸாகும் நாயகன்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (07:57 IST)
கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று நாயகன் திரைப்படம். கமல்ஹாசனுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்த நாயகன் 1987 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி என்பது ரிலீஸுக்குப் பின்னர் காலம் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுத்தது.

இப்போதைய இளம் சினிமா ரசிகர்களும் நாயகன் திரைப்படத்தை ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தினை இப்போது ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றி தமிழ்நாட்டில் 120 திரைகளிலும், கர்நாடகா மற்றும் கேரளாவில் முறையே 50 மற்றும் 60 திரைகளிலும் ரி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்