ஜப்பான் டிரைலர் லான்ச் விழாவில் கலந்துகொள்ளும் இயக்குனர் மணிரத்னம்!

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:58 IST)
கார்த்தி நடிப்பில் அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வில் கார்த்தியின் குருநாதரான இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நடிகர் சூர்யாவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்