கமலை நேரில் சென்று சந்தித்த சாண்டி - லாலாவுடன் கொஞ்சி விளையாடிய கமல் - வைரல் ஸ்டில்ஸ்!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (13:23 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதையடுத்து பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய்டிவிக்கு மிகவும் நெருக்கமான ஆளாக வலம் வந்தார். 


 
அதனாலே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு மிகவும் சுலபமாக கிடைத்தது. அதை அவர் மிகச் சரியாகவும் பயன்படுகொண்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கமலை தனது குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்துள்ளார் சாண்டி. 


 
அப்போது கமலுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சாண்டியின் மகள் லாலாவை கமல் கொஞ்சி விளையாடும் புகைப்படங்ககள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்