கமல் படத்தில் மீண்டும் நடிக்கப்போகும் நடிகை – வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (16:51 IST)
கமல் நடிக்க இருக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை கமலின் நண்பரும் வேல்ஸ் கல்வி நிறுவன உரிமையாளருமான ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள கமலும், ஆரம்பிக்கப் போகும் ரஜினியும் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்