கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமலஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது