பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு? கமல்ஹாசனின் இந்த கவிதை எதை குறிக்கின்றது?

செவ்வாய், 21 ஜூலை 2020 (06:42 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு டுவிட் போட்டால் அந்த டுவீட்டை புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை வேண்டும் என கிண்டலாக நெட்டிசன்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் ஒரு கவிதையை தன்னுடைய டுவிட்டில் பகிர்ந்துள்ளார். இதுதான் அந்த கவிதை:
 
வியக்காதீர், தோழர்களே! மனித நேயம் என்பது விபரீத குணமுள்ளது. வெட்டிக்கொல்லலத் துணியும் சகோதரப் போரில்- புகுந்து தவிர்க்கும் தாய்மையே வெல்லும். அத்தகைய அன்பு வேண்டாமா நமக்கு?
 
பாவமும் புண்ணியமும் ஒருவரை ஒருவர்- நாம் தின்று கொழுத்த பின், யாமையே யாம் தினல் கேவலம் என்று நாம் உணர்ந்த பின் விடிந்ததால்- உதித்தது இவ்வுலகு.
 
நாம் கற்பித்த நாய்கட்கும் ஒரு தனி வீரமுண்டு. வேங்கைப்புலிக்கும் முதலைக்கும் அது உண்டு. அது சமீப காலத்து சான்றோர் அவையில்- மிருக உறுமலின்று வேற என்ன தோழா? உன்னை நான் சாடுவேன்- என்னை நீ ஏசுவாய். இருப்பினும்- அமர்ந்து நாம் உயிர்பலி தவிர்ப்பதே கடமையாகக் கொண்ட ஒரு குடும்பமன்றோ!
 
இதில் விடுபடும் சோதரன் மீண்டு வருவான். அவன் வரும் வரை அவன் செய்த சேதங்கள் சீர் செய்வதென்பது தகப்பனாய் தோழனாய் என் கடமையன்றோ! மன்னித்து அருள்கவென அவனுக்கும் முன்னால் நின்று கேட்பதே நம்மறிவின் உச்சம். பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு?
 
இந்த கவிதையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மீண்டும் அவரே விளக்கினால் தான் புரியும். கந்த சஷ்டி கவசம் பிரச்சனை, வனிதா பிரச்சனை என தற்போது பரபரப்பாகி கொண்டிருக்கும் பிரச்சனையை தான் அவர் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் கூறியுள்ளார்கள். உங்களுக்கு புரிந்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கமெண்ட் பாக்ஸில் கருத்து தெரிவியுங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்