விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இணைந்த ‘அரபுக்குத்து’ பிரபலம்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:57 IST)
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் ‘அரபுக்குத்து’ பாடலில் பணியாற்றிய பிரபலம் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இவர் விஜய் நடித்த ’பீஸ்ட்’  திரைப்படத்தில் இடம்பெற்ற ஆரம்பித்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பதும் அதேபோல் மாஸ்டர் படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இவர் பணியாற்றும் பாடல் வாரிசு படத்தின் பாடலும் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தில் இணைந்துள்ளதை புகைப்படம் ஒன்று மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் அறிவித்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்