தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

Mahendran

சனி, 22 ஜூன் 2024 (09:25 IST)
தளபதி விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி விஜய் என்று தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் இன்று  50வது   பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவரது பிறந்தநாள் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறி செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது. அந்த வாழ்த்து பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும்... அதில் வெற்றியை நோக்கி பயணிப்பதும் சிறந்த ஆளுமைகளுக்கானவோ அடையாளம். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும் உடன் நிற்கும் குணமும், கல்விக்கான பாதையை வலிமையாக வலியுறுத்துவதும்.. தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறட்டும்.  கனவுகள் யாவும் நனவுகளாகட்டும். ஐம்பது நூறாக நலமுடன் வாழிய. வாழ்த்துகள்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்