ஷாருக் கான் படத்தில் விஜய் இணைவது எப்போது? வெளியான தகவல்

புதன், 24 ஆகஸ்ட் 2022 (16:05 IST)
ஷாருக் கான் படத்தில் விஜய் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது விஜய் நடிக்கும் காட்சிகள் செப்டம்பர் மாதத்தில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு நாட்கள் விஜய், இந்த படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்