சலார் படத்துடன் மோதும் ஜெயம் ரவியின் இறைவன்?

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:55 IST)
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. என்றென்றும் காதல் மற்றும் மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியாததால் இந்த படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே தேதியில் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தின் முதல் பாகமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்