ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட ரன்னிங் டைம் அப்டேட்!

vinoth
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (07:33 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். அக்கா தம்பிக்கு இடையிலான உறவை சொல்லும் நகைச்சுவை படமாக பிரதர் உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி என்ற பாடல் சென்சேஷன் ஹிட்டாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. படத்தின் ரிலீஸை ஒட்டி இப்போது ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் ரன் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 20 நிமிடம் விதமாக படத்தொகுப்பு செய்யப்ப்ட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்