மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.
இதனால் இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா புரொடக்ஷன் நிறுவனம். ஆனால் அதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒத்துக் கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஷங்கர் தன்னுடைய கேம்சேஞ்சர் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.