ரஜினியின் கால்ஷீட்டைப் பெற்ற பிரபல தயாரிப்பாளர்… இயக்குனர் யார்?

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:08 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரித்த கோமாளி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.

இந்நிலையில் அவர் இப்போது ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தை  தயாரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இரண்டு பேரையும் ஒரே படத்தில் சேர்த்து நடிக்க வைக்கும் திட்டமும் அவருக்கு இருந்ததாம்.

இந்நிலையில் இப்போது தொடர் முயற்சிகளின் காரணமாக ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்குப் பிறகு நடிக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பை அவர் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்