"தளபதி 64" தெறிக்கவிடும் அப்டேட்! படத்தின் இயக்குனர் இவர் தானா?

Webdunia
திங்கள், 13 மே 2019 (13:05 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார்.


 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே அழைத்து வருகிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்புகள் படுமும்முரமாக நடைபெற்றுவருகிறது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், நடிகர் விஜய் "தளபதி 63" படத்தை தொடர்ந்து மாநகரம் புகழ் இயக்குனர் "லோகேஷ் கனகராஜ்" இயக்கத்தில் "தளபதி 64" படத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த திரை வட்டாரங்கள் மூலம் செய்தி வெளிவந்துள்ளது. 


 
அதுமட்டுமன்றி விஜய்யின் அடுத்த படத்திற்காக பல இயக்குனர்கள் அவரிடம் கதை கூறியிருந்தாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பெயர் தான் பட்டியலில் முதலில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிக்கும் "கைதி" படத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
"தளபதி 64" படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் நிச்சயம் விஜய் பிறந்தநாளான வருகிற ஜூன் 22ம் தேதி வரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்