மீண்டும் அருண் விஜய் படத்தை கிடப்பில் போடுகிறாரா ஹரி? அந்த கதாநாயகனோடு பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:46 IST)
இயக்குனர் ஹரி சூர்யாவுக்காக தயார் செய்த கதைதான் அருவா. ஆனால் அந்த படத்தின் கதை பிடிக்காததால் சூர்யா நிராகரிக்க அதை அப்படியே தன் மைத்துனரான அருண் விஜய்யை வைத்து இயக்க முடிவு செய்தார். ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம்.

ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு  செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்ல்ப்பட்டு வந்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்த படத்தின் பட்ஜெட்தான் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு விக்ரம்மை கதாநாயகனாக வைத்து ஹரி மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் சாமி, அருள் மற்றும் சாமி ஸ்கொயர் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்