விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இறுகப் பற்று திரைப்படத்தின் வித்தியாசமான ப்ரோமோ!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (08:09 IST)
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. தி கேப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல்வேறு தம்பதிகள் இடம்பெற, அவர்களிடம் அவர்களின் திருமண வாழ்க்கைக் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து விலகி உட்கார சொல்கிறார்கள்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் இடைவெளி குறித்து குறியீடாக சொல்வது போல இந்த ப்ரமோஷன் வீடியோ அமைய வைரல் ஆகியுள்ளது. இந்த ப்ரமோஷன் வீடியோ படத்தை பார்க்கும் ஆவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்