கூட்டு வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணுக்காக போராடும் தந்தை… ஆஸ்கர் விருது பட்டியலில் இந்தியாவில் எடுக்கப்பட்ட “To kill a Tiger”

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (09:35 IST)
ஆண்டுதோறும் அமெரிக்காவின் உயர்ந்த திரைப்பட விருதுகளாக ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் நிகழ்வுகளுக்கு இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த முறை இந்தியப் படங்கள் எதுவும் ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் இந்தியாவில் எடுக்கப்பட்ட “To kill a Tiger” என்ற கனடிய ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்தை டொரோண்டோவில் வசிக்கும் நிஷா பகுஜா இயக்கியுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணுக்காக அவரின் தந்தை நீதி கேட்டு போராடுவதை இந்த ஆவணப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. இந்த படம் ஏற்கனவே பல விருது விழாக்களில் 21 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்