குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா-அஸ்வின்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (14:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்ததை அடுத்து சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் அஸ்வினுடன் ஆஜரானார்.

 
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ரிருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
 
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து சௌந்தர்யாவும், அஷ்வினும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை ஜுலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது குடும்ப நல நீதிமன்றம்.
அடுத்த கட்டுரையில்