தமிழில் கமல்; தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (12:34 IST)
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 
இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கிலும் தயாராகிவருகிறது. மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த  நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக  கொடுக்கப்பட்டுள்ளது.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வடிவமைப்பு என்னவென்றால், 15 பிரபலங்கள், 100 நாட்கள் நிகழ்ச்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட வீடு  ஒன்றில் தங்கியிருக்க வேண்டும். வீட்டின் பாத் ரூம்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.  வீட்டில் 100 நாட்கள் தங்கி இருக்கும்பிரபலங்களுக்கு வெளி உலக தொடர்பு இருக்காது.
அடுத்த கட்டுரையில்