இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிற்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கொரொனா தொற்று அதிகரித்தாலும் அம்மாநில முதல்வர் துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் மத்திய அரசிடன் தடுப்பூசிக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் பினராயி விஜயன், அனைத்து வயதினருக்கும் கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனத் தெரிவித்தார்.
இதைச் செயல்படுத்தியும் வருகிறார் அவர். எனவே இதைப்பாராட்டி தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ஹீரோயின் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், நான் எந்தக்கட்சியையும் சார்ந்தவள் கிடையாது; ஆனால் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நீங்கள் கையாண்ட விதம் வியப்பூட்டுகிறது. நீங்கள் துரிதமாக மேற்கொள்ளும் செயல் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.