உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரொனாவால்
பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,இந்தத் தொற்று ஏழைகள், பணக்காரர் என ஒருவரையும் விடாமல் பெரும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன்கபூர் அவரது மனைவி மலைகா அரோரா ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனல் வீட்டிலேயே இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே தனது மகன் அர்கானை கட்டியணைக்க முடியவில்லை எனவும் செல்லப் பிராணியை அரவணைக்க முடியவில்லை எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.